கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட சோலையார் இடது கரை பகுதியில் எஸ்டேட் தொழிலாளியாக வேலை செய்து வரும். ஆறுமுகம் மனைவி முத்து) எ) ராஜேஸ்வரி வயது 56 அவரது பேத்தி பிரியா வயது 15 இடது கரை முக்கு ரோடு அழகப்பன் கோனார் காட்டேஜ் அருகே அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி கொண்ட ஆறுமுகம் மனைவி பேத்தி இருவரும் மண்ணுக்குள் புதைந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் திமுக நகர கழக செயலாளர் உடனடியாக சென்று இறந்தவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் உடல் கூர்வு ஆய்வு செய்த பின்பு இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வால்பாறை பகுதிக்கு வருகை தந்துள்ள சப் கலெக்டர் பிரியங்கா காவல் துறை அதிகாரி ஸ்ரீநிதி மற்றும் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் திருமதி அழகுசுந்தரவல்லி செல்வம். மதுவிலக்கு மற்றும் வீட்டு வசதி துறை சார்ந்த அமைச்சர் முத்துசாமி அவர்கள் இறந்தபின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். பின்பு முதலமைச்சரின் நிதியில் இருந்து 4 லட்சம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் இதனால் வால்பாறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.