கோவை: வனவிலங்கு புகைப்பட கண்காட்சி!

58பார்த்தது
கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் வன விலங்குகளின் அறிய புகைப்படங்கள் அடங்கிய 2025 காலண்டர் வெளியீட்டு விழா மனித வன விலங்கு மோதல் குறித்த கருத்தரங்கு மற்றும் வனவிலங்கு புகைப்பட கண்காட்சி விழா என்னும் முப்பெரும் விழா கோவை சாலையில் உள்ள காமராஜர் ரோடு கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் பிரபல தமிழ் நடிகர் ஆர். ஜே விக்னேஷ் காந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக எல்லை பகுதியில் தொடங்கி காருண்யா, கிருஷ்ணா, மருதமலை, சைதன்யா, ஐ. டி கம்பெனிகள் அரசு துறைகள் என பவானி சாகர் வனப்பகுதி வரை வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் உள்ளன. யானை உட்பட வன விலங்குகள் அனைத்தும் தங்கள் பகுதிக்குள் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இயற்கையாக புலம் பெயர்த்து வரும் வனவிலங்குகள், மனிதன் வசிக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது இல்லை நாம் தான் வனவிலங்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளோம் என்றும், இன்று பத்திரிகைகளை திறந்தாலே தினமும் மனிதன் மற்றொரு மனிதனை தாக்கும் செய்தி பிரதானமாக வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் வன விலங்குகள் மனிதனை தாக்கியது என்ற செய்தி ஓரிரு செய்தியாக தான் வருகிறது. இதனை மனிதர்கள் தாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி