கோவை: தக்காளி விலை கடும் சரிவு - கிலோ ரூ. 10-க்கு விற்பனை!

77பார்த்தது
கோவையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி வெறும் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவையில் உள்ள மதுக்கரை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாட்டு தக்காளி அதிக அளவில் விளைகிறது. இது தவிர, வெளி மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனையானது. ஆனால், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்துள்ளது. இதனால் தக்காளி பயிர் செய்திருக்கும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

டேக்ஸ் :