கோவை, கந்தேகவுண்டன்சாவடி அரசு உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகன், மாணவிகளை ஜாதி அடிப்படையில் பேதமிட்டு நடத்தி, தவறான முறையில் தொடுதல், அவமதிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகார்கள் எழுந்துள்ளன. 11 வயதுடைய மாணவியிடம் நீங்கள் எல்லாம் குப்பை வேலைக்குத்தான் தகுந்தவர்கள் என அவமதித்ததோடு, மாணவியின் சகோதரனை கடுமையாக தாக்கியதாகவும், தனியாகக் கதவின் ஓரத்தில் உட்கார வைத்து மனஅழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் நேற்று மனு அளித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டி, ஆசிரியர் முருகனுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.