கோவை: சாலையில் உயிருக்கு போராடிய பாம்பு பத்திரமாக மீட்பு

55பார்த்தது
கோவை, காளிஸ்வரா மில் அருகே மேம்பாலத்தின் அருகில் வாயில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. 

அப்பகுதியில் வாயில் பலத்த காயங்களுடன் இரத்தக் கசிவுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஏதோ அடிபட்டதன் காரணமாக பாம்பு மிகுந்த வேதனையுடனும், இயலாமையுடனும் காணப்பட்டது அப்பகுதி மக்களை கவலை அடையச் செய்தது. தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் நிபுணர்கள், மிகவும் கவனமாக பாம்பை மீட்டனர். முதற்கட்டமாக பாம்புக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டது. 

பின்னர், பாம்பு முழுமையாக குணமடைவதற்காக வனத்துறை மருத்துவக் குழுவின் பராமரிப்பில் வைக்கப்பட்டது. சிகிச்சை அளித்த பின்னர், பாம்பு முற்றிலும் குணமடைந்ததை உறுதி செய்த வனத்துறையினர், அதனை பாதுகாப்பான வனப்பகுதிக்குள் நேற்று பத்திரமாக விட்டனர்.

தொடர்புடைய செய்தி