கோவை: நிதியறிக்கை ஒளிபரப்பில் சீமான் பேட்டி!

70பார்த்தது
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் காண்பதற்காக கோவையில் முக்கிய இடங்களில் எல். இ. டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
காந்திபுரம் பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் எனப் பல்வேறு இடங்களில் இந்த ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த எல். இ. டி திரையில் நிதியறிக்கை ஒளிபரப்பிற்குப் பதிலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது. இதனைப் பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி