கோவை: முருக பக்தர்கள் மாநாடு - நோட்டீஸ் வழங்கிய வானதி

70பார்த்தது
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நேற்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு, மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு வீடுவீடாக நோட்டீசுகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழக முருக கோவில்களில் அரசின் செயல்கள் இளைஞர்களிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த மாநாடு பக்தர்களின் மனவேதனையை நீக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசும் போது, அவர் தனது வாக்காளர்களை துரோகித்து திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம். பி. பதவிக்கு சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார். அவரது அரசியல் நடை சினிமா வசனங்களைப் போலவே இருப்பதாகவும் விமர்சித்தார்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் அழகிரி சந்திப்பைச் சாதாரண குடும்ப நிகழ்வாகவே பார்க்க வேண்டியது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், முதல்வர் மதுரையில் பார்வையிட்ட இடங்களில் துணிகள் போட்டு மறைத்தது தவறான செயலாகும் என்றும் கூறினார். இதுபோன்ற சூழ்நிலைகள் கோவையிலும் காணப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி