கோவை: கலை நயமிக்க கிறிஸ்துமஸ் வாழ்த்து

78பார்த்தது
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது கலைத் திறமையை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். திராட்சை பழத்தில் இயேசுவின் ஓவியத்தையும், கத்திரிக்காயில் இயேசுவின் உருவத்தையும் அச்சு அசலாக செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். திராட்சை ரசம் கிறிஸ்துவ வேதாகமத்தில் இயேசுவின் இரத்தத்திற்கு இணையாகக் குறிப்பிடப்படுவதால், இந்த திராட்சை பழத்தில் இயேசுவின் ஓவியத்தை வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்க நகை பட்டறை நடத்தி வரும் ராஜா, இதுபோன்ற நுணுக்கமான கலைப் படைப்புகளை முன்னரும் செய்துள்ளார். இவரது இந்த கலை நயமிக்க கிறிஸ்துமஸ் வாழ்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி