கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

77பார்த்தது
கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்த ஆயீஸ் அட்டாக் என்பவரின் மனைவி மாட்டாபி (32) மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை கழிப்பறைக்குச் சென்ற மாட்டாபி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆயீஸ் அட்டாக், கழிப்பறை கதவைத் தட்டியுள்ளார். 

கதவு திறக்கப்படாததால், அதை உடைத்து உள்ளே சென்றபோது, மாட்டாபி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாட்டாபி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து பெரியக்கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி