கோவை, பேரூர் பகுதியில் சோமு பார்ம்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிலம் வாங்கிய 90க்கும் மேற்பட்டோர் மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு, சோமுசுந்தரம் என்பவரிடம் இருந்து நிலங்களை வாங்கியவர்கள், தற்போது அந்த நிலங்கள் நீதிமன்றத்தால் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக நோட்டீஸ் பெறப்பட்டுள்ளனர். நில உரிமையை இழக்கக்கூடிய அபாயத்தில் உள்ளதாகக் கூறும் பாதிக்கப்பட்டவர்கள், மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
சோமுசுந்தரத்திற்கும் பவானி சங்கர் என்பவருக்கும் இடையேயான நிதி சிக்கல்கள், விற்பனை நேரத்தில் மறைக்கப்பட்டதாகவும், இது மோசடியான விற்பனை எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சோமுசுந்தரரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து நில உரிமையை பாதுகாக்க வேண்டும் என கோரிய இந்த புகார், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.