கோவை: தொழிலாளர் நல வாரியங்கள் இணைந்து குறை தீர்வு

65பார்த்தது
கோவை: தொழிலாளர் நல வாரியங்கள் இணைந்து குறை தீர்வு
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (ESI) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) இணைந்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு நபர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், முதலாளிகள், ஓய்வூதியதாரர்கள், தொழிற்சங்கங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் முகாம்களை நேற்று நடத்தியது. கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் நடைபெற்ற முகாமில், ESI துணை இயக்குனர் கார்த்திகேயன், வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் அங்குஷ், சிட்கோ தொழிற்பேட்டை தலைவர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 10 சந்தாதாரர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த இடத்திலேயே குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதேபோல், நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமுண்ட் பகுதியில் நடைபெற்ற முகாமில் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் 5 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளிரோடு பகுதியில் நடைபெற்ற முகாமில் 60 பேர் பங்கேற்றனர். 5 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் புதுசூரியபாளையத்தில் நடைபெற்ற முகாமில் 50 பேர் பங்கேற்றனர். 5 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த முகாம்களில், தொழிலாளர் நல வாரியங்களின் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி