கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரவல் இல்லை, முககவசம் கட்டாயமில்லை, என அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கம் கொடுத்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முககவசம் கட்டாயம் என்ற செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முதல்வர் நிர்மலா, இது தவறான புரிதலாகும் என இன்று தெரிவித்துள்ளார். கிரிஸ்டல் நிறுவன ஊழியர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு காரணமாக முககவசம், கையுறைகள் போன்றவை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதையே பொது மக்கள் மீது தவறாக கூறியதாகத் தெரிவித்தார். தற்போது கோவையில் கொரோனா பரவல் இல்லை, எனவே பொதுமக்களுக்கு கட்டாய முககவசம் இல்லை என்றும், மழைக்காலங்களில் நோய்கள் பரவாமல் இருக்க மாஸ்க் அணிவது சாத்தியமெனவும் கூறினார்.