கோவை: மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி

68பார்த்தது
கோவை: மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி
கோவை, மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையத்தைச் சேர்ந்த 27 வயதான செல்வராஜ், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். சமையல்காரரான செல்வராஜ், நேற்று அன்னூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி