சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ள நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க வினர் 'யார் அந்த சார்?' என போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.
அதே போல இதற்கு திமுகவினர், 'மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புகிறது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பெண்குழந்தைகளின் படிப்பை நிறுத்த பார்க்கிறது, #savegirls education' என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதிமுக திமுக என மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வந்த நிலையில், தற்போது பாஜகவும் கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. அதில் 'பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முழக்கம்!' என்று திமுக, மற்றும் அதிமுகவை விமர்சித்து ஒட்டி இருக்கும் போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.