கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்று கனமழை பெய்து வருவதால் சோலைக் குறுக்கு நெடுஞ்சாலையில் மரம் விழுந்து 5 மணி முதல் இரவு 10. 30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால். சாலை இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால். வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்திற்குள் இருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது இன்று அப்பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.