தொண்டாமுத்தூர்: 41 அடியாக உயர்ந்தது சிறுவாணியின் நீர்மட்டம்
வடகிழக்கு பருவ மழை அக். இரண்டாவது வாரத்தில் துவங்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், இம்மாத துவக்கத்தில் இருந்தே சிறுவாணி அணை பகுதியில், பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது. இன்று காலை 8: 00 மணி நிலவரப்படி, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 20 மி. மீ, அடிவாரத்தில் 5 மி. மீ, மழை பதிவாகியிருந்தது. குடிநீர் தேவைக்காக, 9. 70 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. 41. 10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.