கோவை உடையம்பாளையத்தை சேர்ந்தவர் எட்டப்பன்(38) கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பரை காண பைக்கில் ரங்கநாயகி அம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அறிமுகமான சிறுவர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தொடர்ந்து அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து எட்டப்பன் குடுத்த புகாரின் படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து அந்த 16 மற்றும் 17 வயது சிறுவர்களை நேற்று (அக்.,14) கைது செய்தனர்.