இருபதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ் பேட்டி

1035பார்த்தது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது. தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க. ஸ்டாலின் தேர்தலில் பங்கேற்ற கூட்டணி கட்சிகள், தோழமை அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை தமிழகம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சிகள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக தேசிய தலைவர் அண்ணாமலையை ஒரு லட்சத்திற்கும் மேலான அதிக வாக்குகளில் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, இருபதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ் தலைமையில், கோவை கணபதி பகுதிக்கு உட்பட்ட பாரதி நகர், கேகே நகர், முத்தமிழ் காவலர் கலைஞர் நற்பணி மன்றம் வ உ சி நகர் ஆகிய பகுதியில் இந்திய கூட்டணி கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதில் அழகுமலை, அன்பு, ஜெகநாதன், ராமசாமி, காங்கிரஸ் கோபாலகிருஷ்ணன், பழனிச்சாமி, சி டி சி பழனிச்சாமி, குரு மாணிக்கம், சுபாஷ், சுரேஷ் பாபு, அன்பு, பாலாஜி, மணிமாறன், ஸ்டாலின், ஜெய், ராஜமாணிக்கம், மகளிர் அணியினர் ரெஜினா மேரி, ரஜிதா பேகம் பல்லவி, ஞானம், லட்சுமி, ஜோதிமணி, சுமதி, சரோஜா, ருக்குமணி, மாலதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி