*கொலை வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம். *
கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த *வனுமாமலை மகன் முத்தையா (33)* என்ற நபர் கணுவாய் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் *சிரஞ்சீவி (26)* என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக *முத்தையா (33)* மீது வடவள்ளி காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக *முத்தையா* என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. * அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் *திரு. கிராந்தி குமார் பாடி, இ. ஆ. ப. , * அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான *முத்தையா* என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் *18 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்* கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என *மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்கள் தெரிவித்துள்ளார்.