கோவை அருகே உள்ள சரவணம்பட்டி ஜி. கே. எஸ். நகரில் போஸ் கார்டன் உள்ளது. இங்கு உள்ள ஒரு குடியிருப்பில் வாடகைக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தங்கி உள்ளனர். இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஃபயாஸ் (21) மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் 4 பேர் ஒரே அறையில் தாங்கியுள்ளனர். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று அவர்கள் தங்களது அறையில் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்களின் 4 செல்போன்கள், வாட்ச், மற்றும் ரூ. 3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.