கோவை மாவட்டம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வனுமாமலை என்பவரது, மகன் 33 வயதான முத்தையா என்ற நபர் கணுவாய் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் 26 வயதான சிரஞ்சீவி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக முத்தையா மீது வடவள்ளி காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார், ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முத்தையா, என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், ய பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இன்று மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளியான முத்தையா, என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தற்கான ஆணை இன்று சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கபட்டது.