குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் வாலிபர் தற்கொலை

80பார்த்தது
குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் வாலிபர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் லிங்கம்(26). இவர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கி ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த லிங்கம் கடந்த 26ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்து மயக்கமடைந்தார்.

சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம்(செப்.28) பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் பிள்ளையார் புரம் செந்தமிழ்நகரை சேர்ந்தவர் சத்யா(37). பெயிண்டர். இவர் குடிப்பழக்கத்தை மறக்க கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமாக இருப்பதால் குடிப்பழக்கத்தை உடனே கைவிட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை மறக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சத்யா நேற்று முன்தினம்(செப்.28) வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று(செப்.29) உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி