சரவணம்பட்டி: 51 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் மாயம்

66பார்த்தது
சரவணம்பட்டி: 51 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் மாயம்
கோவை பீளமேடு விளாங்குறிச்சி மெயின் ரோடு, காந்திமா நகரை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செந்தமிழ்செல்வி(70). இவர், தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் காளையார்கோயிலை சேர்ந்த சகாயமேரி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி சகாயமேரி தனது சொந்த ஊரான காளையார்கோயிலுக்கு சென்றார். இதையடுத்து செந்தமிழ்செல்விக்கு தனது உறவினர் ஒருவரின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டது. 

இதனால், அவர் நேற்று முன்தினம்  (பிப்ரவரி 2)  பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை எடுப்பதற்காக பீரோவை திறந்தார். அப்போது அங்கிருந்த 51 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து செந்தமிழ்செல்வி சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரில் வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி