ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் உற்சவ திருவிழா!
-2000க்கும் மேற்பட்ட பக்தகோடிகளுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் பகுதியில் உள்ள
ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனை, திருமலை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம், மகா தீபாராதனை, உச்சி பூஜை, பிரசாதம் வழங்குதல், ஸ்ரீ குருவாயூரப்பன் அலங்காரம் தரிசனம், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, மூன்றாவது வாரமாக இன்று ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்ம உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் மூலிகை அபிஷேகம், தங்க கவசம், அலங்கார தரிசனம், உச்சி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனை தொடர்ந்து, 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், கோயில் நிர்வாகிகள் ஜோதிடர் என். குமரேசன், என். பழனிச்சாமி, கே. கோகுலகிருஷ்ணன், ஆர். சண்முகசுந்தரம் மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், புரட்டாசி மாதம் 23ம் நாள் வரும் அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று 48ம் நாள் மண்டல பூஜை, அபிஷேக பூஜை, ஸ்ரீ தேவி, பூ தேவி ஸ்ரீ நிவாச பெருமாளுக்கு மாங்கல்ய தாரணம், உற்சவ திருவீதி உலா மற்றும் மகா கலச அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிட்டதக்கது.