கோவை சாய்பாபா காலனியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சந்திரசேகர் டாக்டர் எலும்பு முறிவு கிளினிக் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும் உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது.
அதில் போதைப்பொருள் அனுப்பி உள்ளனர் இது குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு மற்றொருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்ததுடன் உடனே டெல்லிக்கு வந்து போதைப்பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும் இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனக்கு யாரும் போதைப்பொருள் அனுப்ப வாய்ப்பு இல்லை என தனது விளக்கத்தை அளித்துள்ளனர்.தொடர்ந்து பேசிய மர்ம நபர்கள் உங்களது வங்கி கணக்கு இருப்புத் தொகை எவ்வளவு உள்ளது என கேட்டுள்ளனர். உடனே சந்திரசேகர் 40 லட்சம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது
இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் தங்கள் கூறும் வங்கி கணக்கு ரூபாய் 39 லட்சத்தி 74 ஆயிரத்து 25 அனுப்பி வைக்க வேண்டும் உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின் இந்த பணத்தை நாங்களே உங்களது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம் என நம்பும்படி தெரிவித்துள்ளனர்.