தேர்வு தோல்வி; மாணவி தற்கொலை

61பார்த்தது
தேர்வு தோல்வி; மாணவி தற்கொலை
கோவை செல்வபுரம் அருகேயுள்ள தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிவேதிதா (14). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் தேர்வு நடந்தது. இதில் 3 பாடங்களில் மாணவி தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது. தான் தேர்ச்சி பெறாமல் இருப்பதை அறிந்த மாணவி மிகவும் சோகத்தில் விரக்தியுடன் காணப்பட்டார். குறைந்த மதிப்பெண் பெற்றால் பொது தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என புலம்பி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இவர் தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நேற்று முன் தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி