திண்டுக்கல் ரஹ்மதுல்லா நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது பிலால்(19). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் தங்கி கோவையில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய பிகே புதூர் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சொந்த ஊர் சென்றதாக தெரிகிறது. நேற்று திரும்பி வந்து பார்க்கும்போது இவருடைய இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். திருடு போன வாகனத்தின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து மாணவன் முகமது பிலால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.