கோவை: அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயார் - விசைத்தறியாளர்கள்!

81பார்த்தது
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள், சோமனூரில் நேற்று அவசர பொதுக்குழு கூட்டம் நடத்தினர். ஏப்ரல் 20ஆம் தேதி மாநில அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், கூலி உயர்வை ஏப்ரல் 21 முதல் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் தற்போது வரை பல ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமல்படுத்தாததால், மீண்டும் போராட்டத்திற்குத் தயாராக இருப்பதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அவனாசி, தெக்கலூர், பல்லடம் பகுதிகளில் உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. முதல்வர் நேரடியாக தலையிட்டு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்றும், உற்பத்தியாளர்கள் வரவுசெலவுப் பில்களை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூலி உயர்வு உடனடியாக வழங்கப்படாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி