கோவை: 300 கோடி மதிப்பில் நவீன நூலகம் – எ. வ. வேலு ஆய்வு

77பார்த்தது
கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு நேற்று நேரில் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த திட்டம் ரூ. 300 கோடி செலவில் நடைப்பெறுவதாகக் கூறினார். இதில், கட்டிடத்துக்கு ரூ. 245 கோடி, புத்தகங்கள் ரூ. 50 கோடி, மற்றும் கணினி வசதிகள் ரூ. 5 கோடி ஆகும். பணிகள் டிசம்பரில் முடிந்து, ஜனவரியில் முதலமைச்சர் திறக்க உள்ளார். இந்த நூலகத்தில் 305 இருக்கைகள் கொண்ட உள் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரிவு, தமிழ்-ஆங்கில நூல்கள், டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், மேற்கு புறவழிச்சாலை, கோல்டு வின்ஸ் - உப்பிலிபாளையம் மேம்பாலம், சிங்காநல்லூர் மேம்பாலம், மற்றும் கோவை-திருச்சி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர் தகவல்களை வழங்கினார்.
திருவண்ணாமலையில் தனிப்பட்ட நிகழ்வில் பங்கேற்றதுக்கான கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினராக அழைக்கப்பட்டதால் கலந்து கொண்டதாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி