தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மலர்களின் வகைகளையும், வண்ணங்களையும், அழகையும் அதன் வணிக முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் கோவை மக்களின் பார்வைக்காக இதுவரை 6 முறை மலர் கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இத்தகைய பெருமைமிக்க நிகழ்வு 7வது முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி 8முதல் 12 வரை நடைபெற இருக்கிறது.
கோவை மலர் கண்காட்சி மற்றும் புதிய பயிர் வகை வெளியீடுகள் ஆகியவற்றை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பானது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் 07.02.2025 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு அறையில் நடைபெறவுள்ளது என வேளாண் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.