கோவை மாவட்டம் இடையார்பள்ளி வடவள்ளி சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஜாஸ்மின் ரூத் (39), தனியார் நிறுவன ஊழியர், லாரி மோதியதில் தலை நசுங்கி மரணம் அடைந்தார். வடவள்ளியில் உள்ள ஷோரூமுக்கு வேலைக்குச் செல்லும் போதே விபத்து நேர்ந்துள்ளது. விபத்தை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரு டிப்பர் லாரியை சிறைபிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அந்த லாரியை ஓட்டியவர் கரூரைச் சேர்ந்த பெரியசாமி என தெரியவந்தது. ஆனால், அவர் இந்த விபத்துடன் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார். விபத்து நடந்த சிக்னல் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.