மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக நாள்தோறும் காலை உணவு வழங்கும் புதிய திட்டம் நேற்று தொடக்கி வைப்பட்டது. இத்திட்டத்தை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட திமுக செயலாளர் இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள்வடிவு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.