கோவை, வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தைப்பொங்கல் விழா நேற்று களைகட்டியது. கல்லூரி முதல்வர் ஆர். என். உமா விழாவை துவக்கி வைத்தார்.
மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து வண்ணக் கோலங்கள் அலங்கரித்த மண் பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர். பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து மாட்டுப்பொங்கலையும் கொண்டாடினர். அம்மி அரைத்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டல், சிலம்பம், வாள்வீச்சு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரை இசைத்து, நடனமாடி மாணவர்கள் உற்சாகமாக விழாவில் பங்கேற்றனர்.