பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால், தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானையை யானை முகாமிற்கு பரிசல் மூலம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மே 26-ம் தேதி சிறுமுகை வனப்பகுதியில் தாயை இழந்து தவித்த குட்டி யானை, வனத்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அது புல் மற்றும் பால் பவுடரை உணவாக எடுத்து நலமுடன் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தாய் யானை மற்றும் யானைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்க டிரோன் மற்றும் நேரடி தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.