கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மணி நகர் பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இந்த சம்பவத்தில் கால், கை எனப் பல இடங்களில் காயம் ஏற்பட்ட 10 பேர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெரு நாய் ஒன்று பொதுமக்களை விரட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஊழியர்களை அனுப்பி நாயைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.