கோவை, மாவட்டம், தொண்டாமுத்தூர், நாகராஜபுரம், வெள்ளிங்கிரி வீதியைச் சேர்ந்த கார்த்திக்- கார்த்திகா அவர்களது, மகன் 6 வயதான குகன்ராஜ் நாகராஜபுரம் அரசு துவக்கப் பள்ளியில் நேற்று (06. 10. 2023) எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததைடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07. 10. 2023) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, அக்குழந்தையின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ. 50, 000 - க்கான காசோலையினை வழங்கினார்,
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் மாவட்ட வருவாய் அலுவலர்டாக்டர். மோ. ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், உள்ளனர்