கோவை சின்னவேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்தவர் மனோ(19) நேற்று நண்பர்கள் 17 பேருடன், தொண்டாமுத்துார் அடுத்த நரசீபுரம் சென்றார். அங்கு சின்னாறு அணைக்கட்டு பகுதியில் குளிக்கும்போது, மனோ புதை மணலில் சிக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் இதைப் பற்றி தகவல் அறிந்த ஆலாந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.