தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஒருங்கிணைந்த இளமறிவியல் மாணவர் சேர்க்கை.
இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் , தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் வேளாண்மைப் பிரிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இக்கல்வியாண்டில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும். 4 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் இளமறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளுக்கு ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.