தன்னை காதலிக்ககூறி, இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்

644பார்த்தது
தன்னை காதலிக்ககூறி, இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்
கோவை மாவட்டம் செல்வபுரம் அடுத்த எல். ஐ. சி காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண், இவர் கல்லூரி முடித்து விட்டு எல். ஐ. சி காலனியில் தையல் கடையுடன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு எதிரே உள்ள ஓட்டலில் கோவை காந்தி பார்க்கை சேர்ந்த நந்தகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எதிரே உள்ள தையல் கடைக்கு சென்று இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து நந்தகுமார், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று இளம்பெண் ஆர். எஸ் புரத்தில் உள்ள வங்கி பயிற்சி வகுப்பிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நந்தகுமார் இளம் பெண்ணை வழிமறித்து மீண்டும் தனது காதலை கூறினார். இதில் கோபமடைந்த இளம்பெண் அவரது காதலை ஏற்பதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் இளம்பெண்ணை கழுத்தை பிடித்து நெரித்து, கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரிடம் தகராறு செய்து செல்போனையும் பறித்தார். அப்போது, அங்கு வந்த இளம்பெண்ணின் தாயார் தனது மகளை வாலிபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரையும் நந்தகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் ஆர். எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி