நல்லூர்வயல் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி ஒற்றை காட்டு யானை- பொதுமக்கள் அச்சம்*
மேற்கு மலைத் தொடர்ச்சியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களில் உள்ளே வந்து உணவு மற்றும் நீர் அருந்துவது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் காருண்யா அருகே நல்லூர்வயல் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளை ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு சேதப்படுத்தி உள்ளது. இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் கூச்சலிட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.