செட்டிபாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் சோதனை செய்தபோது தேவி (55) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 570. 65 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேவி கைது செய்யப்பட்டு சிறைகள் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.