சூலூர், பாப்பம்பட்டி பிரிவு வணிகர் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம்ராஜா, வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இனக்க வரி, கட்டிட வரி ஆகியவற்றிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுவதை எதிர்த்து, மார்ச் மாதத்திற்குள் இந்த சட்டங்களை விளக்காவிட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், சிறு வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்றும், பெரு வணிக நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.