கோவை, கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் செந்தில்நகர் அருகே சோதனை மேற்கொண்ட போது கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 2, 22, 77, 000 ரூபாய் பணம், 1900 No's தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள், செல்போன்-2 மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.