சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம் இரவு, பேக்கரியில் பணிபுரிந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த நீலப்பன் மகன் நிர்மல் (21) மற்றும் அருள்தாஸ் மகன் ராஜா ரவி (27) என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சூலூர் இருகூர் சுங்கம் பகுதியில் தங்கி சோபா, சேர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.