சூலூர்: போதைப்பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!

64பார்த்தது
போதைப் பொருள் இல்லா எதிர்காலத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள், மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் 2, 5 மற்றும் 8 கிமீ என மூன்று பிரிவுகளில் 8வது கேபிஆர் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி, கேபிஆர் கல்லூரி முகப்பு என மூன்று இடங்களில் தொடங்கி கேபிஆர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் கேபிஆர் நிறுவனத்தின் 3000க்கும் அதிகமான பெண் பணியாளர்களும் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதோடு முதலில் வந்த 100 பேருக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு தங்கராமன், இந்திய தடகள வீராங்கனை அபிநயா ராஜாராம் மற்றும் இந்திய ராணுவத்தை சார்ந்த தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி