தீ விபத்து போன்ற அவசர சூழ்நிலைகளில் விரைவாக தீயை அணைக்க, சூலூர் விமானப்படை தளம் நேற்று சிறப்பான ஒத்திகையை நடத்தியது. ஹெலிகாப்டர் மூலம் பெரிய குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் எப்படி தண்ணீரை தெளித்து அணைப்பது என்பதை நேரில் காட்டினர். இந்த ஒத்திகையை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த ஒத்திகை, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.