கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் ஜீவன்ராஜ் (21) என்பவர் கடந்த மாதம் செல்வம் ஸ்டோர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று ஜுவன்ராஜை வழிமறித்து அவரிடமிருந்த 2 ¼ சவரன் தங்க நகை மற்றும் 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு ஆம்னி காரில் ஏறி சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முருகன்(40), பிரபாகரன்(23), ரபிகர்(20), சரத்குமார்(27) மற்றும் முத்துமாரி(43)
ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் 5 பேரை கைது செய்து, 2¼ சவரன் தங்க நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஆம்னி கார்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.