சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் உள்ள நானா யோகா சென்டரில் பயிலும் மாணவர்கள், ஏபிஜே அப்துல் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 25 நிமிடங்களில் 25 யோகாசனங்களை தொடர்ந்து செய்து இச் சாதனையை படைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். யோகா பயிற்சி மூலம் உடல் நலம், மன நலம் மேம்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். பத்மஸ்ரீ நானம்மாளின் மகன் பாலகிருஷ்ணன், யோகா கலையின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் யோகா மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும், யோகா மூலம் பல நன்மைகள் கிடைப்பதாகவும் கூறினார். இன்று இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.