குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு

59பார்த்தது
குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை, பழைய எம். எஸ். ஆர். டேங்க் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு செய்தார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் திரு. முருகேசன், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி