கோவை, ரத்தினபுரி வேதாம்பாள் நகர் அருகே உள்ள காலி இடத்தில் பொதுமக்கள் குப்பை கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நேற்று குப்பையில் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
தீ மளமளவென பரவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
தீ வைத்தது யார் என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை கொட்டுவதால் அப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.